அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கடந்த ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் ‘லப்பர் பந்து’. தமிழரசன் பச்சமுத்து இயக்கியிருந்த இப்படத்தில் சஞ்சனா, ஸ்வாஸ்விகா இருவரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன், டி.எஸ்.கே. உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். கிரிக்கெட் பின்னணியில் காதல், ஈகோ சண்டை, சாதிய பிரச்சனை உள்ளிட்ட விஷயங்களை இப்படம் பேசியிருந்தது.  

Advertisment

இந்த நிலையில் இப்படம் தெலுங்கில் ரீமேக்காகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தினேஷ் கதாபாத்திரத்தில் ராஜசேகரும் ஸ்வாஸ்விகா கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணனும் ஹரிஷ் கல்யாண் கதாபாத்திரத்தில் விஸ்வ தேவும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாபாத்திரத்தில் ராஜசேகரின் மகள் ஷிவானி ராஜசேகரும் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை இயக்குநர் ஐ.வி. சசியின் மகன் ஐ.வி. சசி இயக்குகிறாராம். படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Advertisment

13 (12)

இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் இப்படம் மூலம் ரம்யா கிருஷ்ணனும் ராஜசேகரும் 27 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கின்றனர். இதற்கு முன்பாக ராஜா சிம்ஹம், அல்லரி ப்ரியுடு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளனர். கடைசியாக ‘தீர்க சுமங்கலி பவ’படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் 1998ஆம் வெளியானது.