தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். தன்னுடைய முதல் படத்தின் மூலமாக அனைத்து தரப்பினரின் கவனத்தையும் பெற்றார். அடுத்ததாக அவர் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படம், அவரை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றது.  இதனையடுத்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் விஜய் போன்றவர்களையும் வைத்து படம் இயக்கினார். 

Advertisment

அடுத்ததாக அவர் தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்கவுள்ளார். இந்த நிலையில், நாயகனாக ‘டிசி’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. நாயகியாக வாமிகா கபி நடிக்க அனிருத் இசையமைக்கிறார். முழு நீள ஆக்சன் படமாக இப்படம் உருவாகிறது. படத்தின் டைட்டில் டீசர் கடந்த நவம்பர் மாதம் வெளியாகியிருந்தது. 

Advertisment

இந்த நிலையில் படத்தின் அடுத்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி கிளிம்ப்ஸ் வீடியோ காதலர் தினத்தன்று, அதாவது நாளை (14-02-26) வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. லோகேஷ் இந்த படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானாலும், அவர் ஏற்கனவே, ஸ்ருதிஹாசனுடன் ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.