பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘மார்கழியில் மக்களிசை’ என்ற தலைப்பில் கடந்த ஐந்து வருடங்களாக கலை நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்நிகழ்வு நாட்டுப்புற இசை, கானா, ஒப்பாரி உள்ளிட்ட மேடை ஏற்ற தவறிய கலைகளை கௌரவிக்கும் விதமாக அரங்கேற்றப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு 6ஆம் ஆண்டு மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கியது. இன்று மற்றும் நாளை என சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இந்த விழா நடக்கிறது. இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களான நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இயக்குநர்கள் வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகியோர் பறையடித்து விழாவை தொடங்கி வைத்தனர். பின்பு விழா குறித்து மேடையில் தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டனர்.
அப்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், “நான் இரண்டு வருடம் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். இந்த மேடையில் தங்களது திறமையை காட்டி இப்போது சினிமாவில் பயணித்து வருபவர்களை பார்க்கும்போது இந்த மேடை எவ்வளவு முக்கியமானது என்பது தெரிய வருகிறது. கேஸ்ட்லெஸ்ஸ் கலெக்டிவ் என்பதிலிருந்து மார்கழியில் மக்களிசையாக மாறியதுவரை இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகிறேன்.
தெருக்குறள் அறிவை சினிமா மூலம் அறிமுகமானதை விட இந்த மேடையில் தான் அவர் யார் என்பது தெரிய வந்தது. இது போன்று எத்தனையோ திறமையாளர்கள், மேடை கிடைக்க கஷ்டப்படும்போது அவர்களுக்கு ஒரு மேடை கொடுத்து அதை தொடர்ந்து இத்தனை ஆண்டுகள் செய்து கொண்டு வரும் ரஞ்சித் அண்ணாவுக்கு என்னுடைய பாராட்டுக்கள். இந்த நிகழ்ச்சிக்கு என்னுடைய பங்களிப்பும் இருக்கும் என ரஞ்சித்துக்கு உறுதியளித்திருக்கிறேன்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/27/20-40-2025-12-27-10-33-12.jpg)