கடந்த 2019 ஆம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளியான படம் கைதி. லோகேஷ் கனகராஜ், இந்த படத்தை இயக்கி இருந்தார். புதுவிதமான கதைக்களத்தைக் கொண்டிருந்த இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதே நேரத்தில், விமர்சனங்களும் நேர்மறையானதாக இருந்ததால், இப்படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது. இதில், நரேன், அர்ஜுன் தாஸ், ஜார்ஜ் மரியன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 

Advertisment

படம் மாபெரும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, ரசிகர்களிடையே இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது. இதனால், இப்படம் எப்போது தொடங்கப்படும் என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்தது. ஆனால் லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து வேறு படங்களை கமிட் செய்து பிஸியானார். கடைசியாக அவர் கூலி படத்தை இயக்கியிருந்த நிலையில் இதை முடித்துவிட்டு தொடங்கப்படும் என கூறியிருந்தார். ஆனால் இப்போது அல்லு அர்ஜூன் படத்திற்கு சென்றுவிட்டார். இதனால் படம் கைவிடப்பட்டதா என்ற கேள்வி எழுந்தது. கார்த்தியும் இப்படம் குறித்து லோகேஷ் கனகராஜ் சொல்வார் என நம்பிக்கை இல்லாமல் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். 

Advertisment

இந்த நிலையில், கைதி படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் வரும் என்று லோகேஷ் தெரிவித்துள்ளார். தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள அல்லு அர்ஜுன் உடனான படத்தை முடித்துவிட்டு, கைதி 2 படத்திற்கான வேலைகளைத் தொடங்க இருக்கிறார். இதனிடையே, கைதி படத்தில் வரும் கார்த்தியின் ‘டில்லி’ என்கிற கதாபாத்திரத்தின் பெயரில் ஒரு டீசருக்கு தயாரிப்பு நிறுவனம் தணிக்கை சான்றை வாங்கியுள்ளது. இது கைதி 2 படத்திற்கான டீசராக இருக்கலாம் என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அதனால், ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேற இருப்பதாகவும் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன.