2017ம் ஆண்டு  வெளியான மாநகரம் படத்தை இயக்கியதன் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இப்படம் நேர்மறையான விமர்சனங்களைப்பெற்று குறிப்பிடத்தக்க அளவிலான வெற்றியைப் பெற்றது. இதனால் புகழ் பெற்ற இயக்குநராக மாறிய லோகேஷ், முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கும் வாய்ப்புகளை பெற்றார்.

Advertisment

அந்த வகையில், இவரது இயக்கத்தில் கார்த்திக் நடித்த 'கைதி' திரைப்படம் அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படத்தின் வெற்றியையடுத்து விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கினார். இப்படம் லோகேஷின் திரை வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த படமாக மாறியது. அடுத்தக்காக கமலஹசனை வைத்து அவர் இயக்கிய 'விக்ரம்' படம் 'பான் இந்தியா' படமாக மாறியது. மேலும், எதிர்பாராத அளவிலான வசூலையும் அள்ளியது. இதனால் லோகேஷின் புகழ் மட்டுமல்லாமல் சம்பளமும் வெகுவாக உயர்ந்தது. 

Advertisment

இதைத் தொடர்ந்து விஜயை வைத்து 'லியோ', ரஜினியை வைத்து 'கூலி' போன்ற படங்களை இயக்கினார். கூலி படத்திற்குப் பிறகு,  எந்த படமும் இயக்காமல் இருந்து வந்த லோகேஷ், தனது அடுத்த படத்திற்காக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை சந்தித்து பேசியுள்ளார். தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜுன், அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் லோகேஷுடன் இணைவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த படத்திற்கு லோகேஷ் கனகராஜ் 75 கோடி வரை சம்பளம் வாங்குவர் என்ற தகவல்கள் வெளியாகின்றன.