இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கடைசியாக ரஜினியை வைத்து கூலி படம் இயக்கி இருந்தார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் கைதி 2 மற்றும் பாலிவுட்டில் ஆமீர்கானுடன் ஒரு படம் பண்ண கமிட்டாகி இருந்தார். இதனிடையே ரஜினி - கமல் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒன்றாக நடிக்கும் படத்தை இவர் இயக்குவதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது அவர் வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.
அதேபோல் பாலிவுட்டிலும் அவர் இயக்க உள்ள ஆமிர்கானின் படமும் கைவிடப்பட்டதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் விரைவில் அவர் கைதி 2 படம் இயக்குவதாக பரவலாக சொல்லப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க நாயகனாக அவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கமிட்டாகி இருந்தார். இப்படத்திற்காக தற்காப்புக்கலையும் அவர் கற்றுக் கொண்டிருந்தார். சமீபத்தில் இப்படத்தில் பாலிவுட் நடிகை வாமிகா கபி நடிப்பதாக தகவல் வெளியானது. மேலும் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகமலே இருந்த நிலையில் தற்போது டைட்டில் டீசருடன் வெளியாகியுள்ளது.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். படத்திற்கு ‘டிசி’(DC) எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. டைட்டில் டீசரில், லோகேஷ் கனகராஜ் உடல் முழுக்க ரத்தக்கறையுடன் கையில் துப்பாக்கியுடன் நடந்து வருகிறார். தேவதாஸ் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக தெரிவிக்கப்படுள்ளது. அதே சமயம் வாமிகா கபி பாலியல் தொழிலுக்கு போவது போல் தயாராகி லோகேஷ் நடந்து வந்த அதே பில்டிங்கின் உள் நடந்து வருகிறார். அவர் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இருவரும் பழிவாங்குதல் நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டது போல் ஒரே ஸ்டைலில் நடந்து வருகின்றனர். இறுதியில் இருவரும் ஒரே அறையில் பார்த்து கொள்கின்றனர். அத்துடன் டீசர் முடிகிறது. இப்படம் ஆக்ஷன் நிறைந்த இரத்தம் தெறிக்கும் சண்டை காட்சிகள் இருக்கும் படமாக இருப்பதாக தெரிகிறது. படம் அடுத்த ஆண்டு கோடையில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/01/08-4-2025-11-01-19-24-22.jpg)