என்றைக்கு இந்த ஃபேன் இந்தியா திரைப்படங்கள் மிகவும் பிரபலமாக இருக்க தொடங்கியதோ அதிலிருந்து பார்ட் ஒன் பார்ட் 2 திரைப்படங்கள் அதிகமாக வெள்ளி திரையில் கால் பதிக்கின்றன. குறிப்பாக தெலுங்கு திரை உலகில் பெரும்பாலும் அனைத்து உச்ச நடிகர்களுமே இரண்டு பாக திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கின்றனர். அந்த அளவு இந்த இரண்டு பாக திரைப்படங்கள் மோகம் இப்பொழுது சினிமாவில் அதிக அளவு இருந்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மற்றொரு பிளான் இந்தியா திரைப்படம் கேரளாவில் இருந்து இறக்குமதி ஆகி இருக்கிறது. இதுவும் ஒரு இரண்டு அல்லது மூன்று பாக திரைப்படமாக உருவாகி அதன் முதல் பாகம் லோகா சாப்டர் - 1 சந்திராவாக வெளியாகி இருக்கிறது. இது மற்ற பேன் இந்தியா படங்களை போல் அனைவரையும் கவர்ந்ததா, இல்லையா?
வேறு ஒரு ஊரில் இருந்து நகரத்துக்கு வரும் கல்யாணி மர்மமான முறையில் செய்கைகள் செய்து கொண்டு பகல் நேரத்தில் வீட்டில் இருந்து கொண்டு இரவு நேரத்தில் மட்டும் வெளியே சென்று வேலை செய்து வருகிறார். இவரது எதிர்த்த பிளாட்டில் வசிக்கும் நாயகன் நஸ்லென் பால்கனியில் இருந்து ஜன்னலில் தெரியும் கல்யாணியை பார்த்த மட்டில் காதலில் விழுகிறார். அவரை எப்படியாவது கரெக்ட் செய்து விட வேண்டும் என அவரை பின்தொடர்கிறார். இதற்கிடையே நகரில் ஆங்காங்கே பலர் கடத்தப்பட்டு அவர்களின் உறுப்பு ஒரு கடத்தல் கும்பலால் திருடப்படுகிறது. இதை துப்பு துலக்குகிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாண்டி. அந்த திருட்டு கும்பலை சேர்ந்த ஒருவன் கல்யாணியின் பெண் தோழியை ஈவ்டீசிங் செய்ய அதைக் கண்ட கல்யாணி அவர்களை அடித்து துவைத்து விடுகிறார். இதனால் கோபமடைந்த திருட்டு கும்பல் கல்யாணியை கடத்தி சென்று அவரது உறுப்பை திருடப் பார்க்கும் சமயத்தில் ரத்த காட்டேரியாக மாறும் கல்யாணி அவர்களை கடித்து அவர்களின் ரத்தத்தை உறிந்து கொலை செய்து விடுகிறார். இதனை நாயகன் நஸ்லென் பார்த்து விடுகிறார். நாயகன் நஸ்லேனுக்கு கல்யாணி ஒரு ரத்த காட்டேரி பேய் என தெரியவர அவரை மட்டும் கல்யாணி ஒன்றும் செய்யாமல் விட்டு விடுகிறார். இதைத்தொடர்ந்து இவர்கள் இருவரையும் சாண்டி தலைமையில் இருக்கும் போலீஸ் கும்பல் வலை வீசி தேடுகிறது. அதேசமயம் உறுப்பு திருட்டு மாஃபியா கும்பலும் இவர்களை மறுபுறம் தேடுகிறது. இதைத்தொடர்ந்து ஒரு கட்டத்தில் கல்யாணியிடம் சிக்கும் சாண்டி அவரிடம் கடிபட்டு அவரும் ஒரு டிராகுலா ரத்த காட்டேரியாக மாறுகிறார். இதைத்தொடர்ந்து டிராகுலா சாண்டி ஒரு பக்கம், போலீஸ் ஒரு பக்கம், உறுப்பு திருட்டு கும்பல் ஒரு பக்கம் என மூன்று கும்பல்கள் கல்யாணி மற்றும் நஸ்லேன் ஆகியோரை கொலை செய்ய துரத்துகிறது. இவர்களிடமிருந்து கல்யாணி மற்றும் நஸ்லென் தப்பித்தார்களா, இல்லையா? கல்யாணியால் சிக்கலில் மாட்டிக் கொண்ட நஸ்லென்னின் கதி என்னவானது? அவரை கல்யாணி காப்பாற்றினாரா இல்லையா? கல்யாணி எப்படி டிராகுலாவாக மாறினார்? என்பதே லோகோ சாப்டர் - 1 சந்திரா படத்தின் மீதி கதை.
மலையாள சினிமாவில் இருந்து முதல் முறையாக ஒரு ஹாலிவுட் தரத்தில் சிறப்பான ஒரு திரைப்படம் வெளியாகி இருக்கிறது. ஒரு புதிய கதை களத்தை எடுத்துக்கொண்டு விறுவிறுப்பான திருப்பங்களை கொண்ட திரைக்கதை அமைத்து அதனுள் கேரள சினிமாவுக்கு ஏற்றார் போல் அழுத்தமான காட்சி அமைப்புகள் மூலம் நிறைவான சூப்பர் ஹீரோ ஃபேண்டஸி கதை படமாக இந்த யோகா படத்தை சிறப்பாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர் டோமினிக் அருண். இதுவரை இந்திய சினிமாவில் வராத ஒரு வித்தியாசமான கதையை வைத்துக்கொண்டு படத்தை ஹாலிவுட் தரத்தில் மேக்கிங் இல் உருவாக்கி அதேபோல் திரைக்கதை அமைப்பையும் ஹாலிவுட் பாணியில் உருவாக்கி பார்ப்பவர்களுக்கு ஒரு நல்ல ஹாரர் திரில்லர் படம் பார்த்த உணர்வை கொடுத்திருக்கிறார். சூப்பர் ஹீரோ கதையாக இது விரியும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு எச்சி எனப்படும் மோகினி ரத்த காட்டேரி பேய் படமாக இதை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றார் போல் நவீன அம்சங்கள் நிறைந்த படமாக உருவாக்கி இந்த கால ரசிகர்களையும் ரசிக்க வைக்கும்படி கொடுத்திருக்கிறார் இயக்குனர் டொமினிக் அருண். படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை அழுத்தமான காட்சிகள் மற்றும் சுவாரஸ்யமான காட்சிகள் மூலம் எதுவாக நகர்ந்து அவ்வப்போது நல்ல திருப்பங்கள் இடையே விறுவிறுப்பாக நகர்ந்து முதல் பாக திரைப்படமாக இந்த படம் முடிந்து அடுத்த பாகத்திற்கான லீட் ஓடு நிறைவாக முடிகிறது. திரைக்கதை வேகத்தில் மட்டும் இன்னமும் கூட சுவாரஸ்யம் கூட்டி இருக்கலாம்.
நாயகி கல்யாணி பிரியதர்ஷன் தனக்கு கொடுத்த சூப்பர் ஹீரோ வேடத்தை சிறப்பாக கையாண்டு நல்ல நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். இதுவரை நாம் பார்த்த கல்யாணி பிரியதர்ஷன் இந்த படத்தில் தென்படாமல் வித்தியாசமான நடிப்பின் மூலம் கவர்கிறார். இவரது எதார்த்த நடிப்பு கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் வலு சேர்த்து இருக்கிறது. நாயகன் நஸ்லென் பிரேம் முழு படத்தில் நாம் பார்த்த பப்ளி நாயகன் இந்த படத்தில் கூடவே அப்பாவி நாயகனாகவும் மாறி காட்சிக்கு காட்சி சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் ஏற்றிருக்கும் அந்த கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதற்கான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். இவருடன் நடித்த நண்பர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கின்றனர். பல காட்சிகளில் கலகலப்பாகவும் காட்சிகளை நகர்த்த உதவி இருக்கின்றனர். ரப் அன்ட் டப் போலீசாக வரும் சாண்டி வரும் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார். இவரது வில்லத்தனமான நடிப்பு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து இருக்கிறது. மற்றபடி உடன் நடித்த அனைத்து நடிகர்களுமே அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றனர். சிறப்பு தோற்றத்தில் வரும் டொவினோ தாமஸ் மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர் ஒவ்வொரு காட்சிகளில் வந்து ரசிகர்களுக்கு விருந்து அளித்திருக்கின்றனர்.
நிமிஷ ரவி ஒளிப்பதிவில் காட்சிகள் உலகத்தரம். குறிப்பாக இரவு நேர காட்சிகளில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து படத்தையும் ஹாலிவுட் தரத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார். ஜேக்ஸ் பிஜாய் இசையில் ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாக நகர்த்தி எந்தெந்த காட்சிகளுக்கு எந்த வகையான இசை வேண்டுமோ அதை சிறப்பான முறையில் கொடுத்து ஒரு ஆங்கில படத்திற்கு நிகரான இசையை கொடுத்திருக்கிறார்.
கேரள சினிமாவிலிருந்து ஒரு சூப்பர் ஹீரோ ஃபேண்டஸி ஹாரர் பேன் இந்திய திரைப்படமாக வெளியாகி இருக்கும் இந்த லோகா சாப்டர் - 1 சந்திரா திரைப்படம் புதுவித கதை அம்சத்தோடு சிறப்பான திருப்பங்களோடு உருவாகி அதேசமயம் கேரள சினிமாவுக்கே உரித்தான விவேகமான திரைக்கதையுடன் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறது. ஒரு ஃபேண்டஸி படங்களுக்கே உரித்தான விறுவிறுப்பான திரைக்கதை மட்டும் இன்னமும் கூட சிறப்பாக அமைத்திருக்கலாம்.
லோகா (சாப்டர் - 1 சந்திரா) -ஸ்வீட் அரக்கி!