Advertisment

லிங்குசாமிக்கு சிறை தண்டனையா? - நிறுவனம் விளக்கம்

05 (11)

திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வரும் இயக்குனநர் லிங்குசாமி, தனது நிறுவனத்திற்காக 2016 ஆம் ஆண்டு ரூ. 35 லட்சம் ஒரு தனியார் நிறுவனத்திடம் கடனாக பெற்றுள்ளார். இந்தக் கடனை வட்டியுடன் ரூ. 48 லட்சத்தை செலுத்த வேண்டும் என தனியார் நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

Advertisment

கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது லிங்குசாமி மற்றும் திருப்பதி பிரதர்ஸ் இயக்குநர் சுபாஷ் சந்திரபோஸ் இருவருக்கும் எதிராக தீர்ப்பு வழங்கியது. இதனால் இருவருக்கும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தீர்ப்பு தொடர்பாக திருப்பதி பிரதர்ஸ் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

அதன் இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்ட அந்த அறிவிப்பில், “என் மீதும், என் நிறுவனத்தின் மீதும் Paceman Finance நிறுவனம் காசோலை வழக்கு மாற்றுமுறை ஆவணச் சட்டம் 138 - கீழ் நாக்கல் செய்தனர். அவ்வழக்கில் இன்று பதினொன்பது பெருநகர குற்றவியல் நீதிமன்றம் எங்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளனர். மேலும், நாங்கள் மேல்முறையீடு செய்வதற்கு 30 நாள் கால அவகாசம் வழங்கியுள்ளனர். நாங்கள் இதை சட்டப்படி மேல்முறையீடு செய்து எங்கள் மீதும் எங்களின் நிறுவனத்தின் மீதும் போடப்பட்ட பொய்வழக்கை சட்டப்படி மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்.

எங்கள் மீது கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொய்யான செய்தியை கூறி வருகிறார்கள். அப்படியான செய்தியை பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் யாரும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். எங்கள் மீது பரப்பப்படும் வதந்திகள் பொய்யானவை என்று கூறிக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

directorlingusamy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe