லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான படம் அஞ்சான். திருப்பதி பிரதர்ஸ் தயாரித்திருந்த இப்படத்தில் சமந்தா கதாநாயகியாகவும் மனோஜ் பாஜ்பாய் வில்லனாகவும் நடித்திருந்தனர். மேலும் வித்யூத் ஜமால் முக்கிய கதாபாத்திரத்திலும் சூரி நகைச்சுவை வேடத்திலும் நடித்திருந்தார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த நிலையில் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் சூர்யா பாடிய ‘ஏக் தோ தீன் சார்’ பாடல் சிறப்பம்சமாக அமைந்திருந்தது.
மும்பை டான் கல்ச்சர், அசத்தலான சூர்யா கெட்டப், சூர்யா குரலில் பாடல் என ஏகப்பட்ட எதிர்பாப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் போதிய வரவேற்பை பெறவில்லை. சமூக வலைதலங்களில் கிண்டலுக்கும் கேலிக்கும் உண்டானது. குறிப்பாக இயக்குநர் லிங்குசாமியின் பில்டப் பேச்சு சமூக வலைதளங்களில் ட்ரோல் மெட்டீரியலாக மாறியது.
இந்த நிலையில் இப்படம் வருகின்ற 28ஆம் தேதி ரீ ரிலீஸாகிறது. இதில் புதிதாக ரீ எடிட் செய்து வெளியாகிறது. இது தொடர்பாக இயக்குநர் லிங்குசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், ரீ எடிட்டுக்கான காரணம் குறித்து பேசினார். அவர் பேசியதாவது “15 வருஷம் முன்னாடி அதிகமா ட்ரோல் செய்யப்பட்ட படம் இந்த படம். அதுல முதல் முதல்ல சிக்குனது நம்மதான். ஆனா படததை உண்மையா ரசிச்ச சில பேர் இருக்காங்க. அவங்க இந்த 15 வருஷத்துல என்னை எப்பையாவது பார்த்தா, ஏன் சார் இந்த படத்தை திட்டுனாங்க, எனக்கு ரொம்ப பிடிக்கும்... இப்படின்னு நிறைய பேரு என்கிட்ட சொல்லி இருக்காங்க. அதேபோல சின்ன பையன் இருந்தானா, அவனை காமிச்சு, சார் இவன் உங்க படத்தை 5 தடவை பாத்திருக்கான் சார்... அதுல வர்ற மாதிரியே குச்சியை வாயில வச்சுட்டு எடுப்பான் சார்னு சொல்லுவாங்க.
நானே இந்த படத்தை யோசிச்சப்போ, நான் சின்ன வயசா இருந்தா எந்த மனநிலையில ஒரு படம் பார்ப்பேனோ, அந்த மனநிலையில தான் பன்னேன். அதைத்தவிர உலக மகா கதை, இது புரட்டி போடும்னு நினைச்சு பன்னல. ஆனா சூர்யா ரசிகர்களுக்கு இந்த படம் புடிச்சிருக்கு. நேத்து அவங்களோட பேசுனேன். நான் என்னென்னலாம் நெனச்சு பன்னேனோ, அது எல்லாமே அவங்களுக்கு கனெக்ட் ஆச்சு. அவங்களும் ஒரு ஹீரோவ எப்படியெல்லாம் பாக்கணும்னு ஆசைப்பட்டாங்களோ அது படத்துல இருந்துச்சு. அதனால இந்த படத்தை பாராட்டுனவங்க, சின்ன பசங்க, சூர்யா ரசிகர்கள்... இவங்களுக்காக மட்டும் தான் இந்த படமே. அதேபோல் எங்க திருப்திக்காகவும்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/26/14-20-2025-11-26-19-02-42.jpg)