விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’. இப்படத்தில் க்ரித்தி ஷெட்டி கதாநாயகியாகவும் எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். மேலும் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

Advertisment

லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவர் இசையில் முன்னதாக வெளியான ‘தீமா’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து வெளியான இரண்டாவது பாடலான ‘பட்டுமா’ பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே வெளியான படத்தின் முன்னோட்டம் பலரது கவனத்தை ஈர்த்தது. 2040ஆம் ஆண்டு காலகட்டத்தில் கண்கவரும் உலகத்தில் கதைக்களம் நடப்பதாக முன்னோட்டம் அமைந்திருந்தது. மேலும் அனிருத் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் 2015ஆம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி ஹிட்டடித்த ‘எனக்கென யாருமில்லையே’ பாடல் இடம்பெற்றது. 

Advertisment

இந்த நிலையில் படத்தில் இடம்பெறும் ‘எனக்கென யாருமில்லையே’ பாடல் நாளை வெளியாகிறது. அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. மீண்டும் காதலர் தினத்தை முன்னிட்டு 11 வருடங்களுக்கு பிறகு வெளியாகும் இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.