‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன். அதைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வந்தார். அவரே தயாரிக்கும் இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்கிறார். ஷாம், ஆண்ட்ரியா ஜெரிமியா, 'பாகுபலி' பிரபாகர், சந்தோஷ் பிரதாப், 'லியோ' புகழ் பேபி இயல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். 

Advertisment

இப்படம் தூத்துக்குடியை மையமாக வைத்து ஒரு உண்மை சம்பவ அடிப்படையில் ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ளது. இப்படம் குறித்து முன்னதாக பேசிய லெஜண்ட் சரவணன், இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், த்ரில் என அனைத்து சுவாரஸ்ய அம்சங்களும் இருக்கும் எனவும் டைட்டிலும் மாஸாக இருக்கும் எனவும் கூறியிருந்தார்.  

Advertisment

இந்த நிலையில் படத்தின் டைட்டில் லுக் மற்றும் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘லீடர்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டீசரை பார்க்கையில் வில்லன் கேங்கை புரட்டி எடுக்கும் சரவணன் பின்பு தனது குழந்தையுடன் கூலாக ஐஸ்க்ரீம் சாப்பிடும் காட்சி இடம் பெற்றுள்ளது. மேலும் ‘எல்லா அப்பனும் தான் பிள்ளைக்கு ஹீரோ தாண்டா’ என பேசும் வசனம் இடம் பெறுகிறது. இப்படம் வரும் ஏப்ரலில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.