‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன். அதைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் ‘லீடர்’ எனும் படத்தில் நடித்துள்ளார். அவரே தயாரித்துள்ள இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான பாயல் ராஜ்புத் நாயகியாக நடித்துள்ளார். மேலும் ஷாம், ஆண்ட்ரியா ஜெரிமியா, 'பாகுபலி' பிரபாகர், சந்தோஷ் பிரதாப், 'லியோ' புகழ் பேபி இயல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இப்படம் தூத்துக்குடியை மையமாக வைத்து ஒரு உண்மை சம்பவ அடிப்படையில் ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ளது. சமீபத்தில் டைட்டில் லுக் மற்றும் டைட்டில் கிளிம்ஸ் ஆகியவற்றை படக்குழு வெளியிட்டது. இதில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றன. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அதில் ஆரம்பத்தில் ‘என் பொண்ணு கூட நான் இருக்கனும். அதுக்காக இந்த உலகத்தையே எதிர்க்க சொன்னாலும் எதிர்த்து நின்னு ஜெயிப்பேன்’ என்ற வசனத்துடம் தொடங்குகிறது. பின்பு அவருக்கும் பாயல் ராஜ்புத்தும் திருமணம் செய்து கொள்வது போலவும் அவர்கள் ஒரு குழந்தையை வளர்ப்பது போலவும் காட்சிகள் இடம் பெறுகிறது. ஆனால் அவர்களுக்கு ஒரு பிரச்சனையை வருவது போலவும் அதை தீர்க்க லெஜண்ட் சரவணன் எதிர்கொள்ளும் சவால்களை ஆக்ஷன் கலந்து கூறியிருப்பது போலவும் ட்ரெய்லர் அமைந்துள்ளது.
இடையே சரவணன் சிறையில் இருக்கும் காட்சிகளும் இடம் பெறுகிறது. மேலும் ஆக்ஷன் காட்சிகளை முருகன் பாடலான ‘முத்தைத்தரு பத்தித் திருநகை’ பின்னணியில் அந்த பாடலுக்கேற்ப எடிட் செய்யப்பட்டுள்ளது. அதே போல் சக்திவேல் என்ற கதாபாத்திரத்தில் லெஜண்ட் சரவணன் நடித்துள்ளார். இந்த ட்ரெய்லர் படத்திற்கு ஒரு நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படம் ஏப்ரலில் வெளியாவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் விரைவில் ரிலீஸ் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/05/395-2026-03-05-16-24-01.jpg)