Advertisment

லெஜண்ட் சரவணனின் ‘லீடர்’ ரிலீஸ் தேதி இதுவா?

364

லெஜண்ட் சரவணன், புதிதாக நடித்துள்ள படம் ‘லீடர்’. இப்படத்தை துரை செந்தில் குமார் இயக்கியுள்ளார். லெஜண்ட் சரவணனே தயாரித்துல் உள்ளார். இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத் நாயகியாக நடித்திருக்க ஷாம், ஆண்ட்ரியா ஜெரிமியா, 'பாகுபலி' பிரபாகர், சந்தோஷ் பிரதாப், 'லியோ' புகழ் பேபி இயல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

Advertisment

இப்படம் தூத்துக்குடியை மையமாக வைத்து ஒரு உண்மை சம்பவ அடிப்படையில் ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ளது. சமீபத்தில் டைட்டில் லுக் மற்றும் டைட்டில் கிளிம்ஸ் ஆகியவற்றை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து சமீபத்தில் டீசரும் வெளியானது. இதுவரை வெளியான அனைத்திலுமே அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. மேலும் படத்திற்கு எதிர்பார்ப்பையும் அதிகரித்தது. 

Advertisment

இப்படம் ஏப்ரலில் வெளியாவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் ஏப்ரல் 3-ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. அதற்கு முன்பு மார்ச் 21 அன்று சென்னை நந்தம்பாக்கம் டிரேட் செண்டரில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

Durai Senthilkumar legend saravana
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe