R.S. துரை செந்தில்குமார் எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள‌து 'லீடர்'. இது சாமானியன் எதிர்கொள்ளும் அசாதாரண சவால்களை விறுவிறுப்புடனும் பரபரப்புடனும் விவரிக்கிறது. லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பேனரில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடிக்கிறார்.

Advertisment

'எதிர்நீச்சல்', 'காக்கி சட்டை', 'கொடி', 'பட்டாஸ்', 'கருடன்' ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உள்ள R.S. துரை செந்தில்குமார் எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள 'லீடர்' படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவருவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் கதை குறித்து விவரித்த படக்குழுவினர், "நிழல் உலகத்திற்கும் காவல் துறைக்கும் இடையே நடக்கும் யுத்தத்தில் ஒரு சாமானியன் சிக்கிக்கொள்கிறான். அதன் தீவிரத்தில் இருந்து அவன் தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் எவ்வாறு காப்பாற்றிக் கொண்டு தப்பிக்கிறான் என்பதே லீடர்," என்றனர். 

Advertisment

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் தொடங்கி ஜெய்ப்பூர், ஊட்டி, ஜார்ஜியா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று சென்னையில் நிறைவுற்றது. மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில் என அனைத்து சுவாரசிய அம்சங்களும் நிறைந்து இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் இப்படம் இருக்கும்.