Advertisment

மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட்ட லட்சுமி மேனன்

புதுப்பிக்கப்பட்டது
09 (2)

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் மதுபான விடுதி ஒன்றில் இரு கும்பலுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதில் ஒரு கும்பல் காரில் புறப்பட்டு சென்ற நிலையில், மற்றொரு கும்பல் அவர்களை விரட்டி சென்று, காரை வழிமறித்து அதிலிருந்த ஐடி ஊழியரை கடத்தி தாக்கியதாகக் கூறப்படுகிறது.

Advertisment

சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக அதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ஐடி ஊழியரை தாக்கிய கும்பலில் நடிகை லட்சுமி மேனனும் இருப்பது தெரியவந்தது. பின்பு லட்சுமி மேனன் மற்றும் அவரது நண்பர்கள் மீது போலீஸார் ஆள் கடத்தல் வழக்கு பதிவு செய்து அந்த நண்பர்கள் 3 பேரை கைது செய்தனர். லட்சுமி மேனனை அவர்களால் நெருங்கமுடியவில்லை. அவர் தலைமறைவாகவே இருந்து வந்தார். 

Advertisment

இதையடுத்து லட்சுமி மேனன் முன் ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மன்னு தாக்கல் செய்தார். அவருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில், லட்சுமி மேனன் மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். அதாவது தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நவம்பர் 7ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

court Kerala lakshmi menon
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe