Advertisment

“நான் உன்னை மறக்க மாட்டேன்...” - லைலா வெளியிட்ட வீடியோ

17 (47)

சமீப காலங்களில் ரீ ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அப்படி வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெறுகிறது. அந்த வகையில், விஜய்யின் கில்லி, ரஜினியின் படையப்பா மற்றும் சமீபத்தில் வெளியான அஜித்தின் மங்காத்தா ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 

Advertisment

இதனைத் தொடர்ந்து தற்போது கடந்த 2002ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘மௌனம் பேசியதே’ படம் காதலர் தினத்தை முன்னிட்டு ரீ ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் அமீர் இயக்குநராக அறிமுகமாகியிருந்தார். மேலும் த்ரிஷாவும் நாயகியாக அறிமுகானார். மேலும், லைலா நந்தா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். காதலை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல பெற்றிருந்தன. இப்படம் வெளியான அந்த காலகட்டத்திலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. 

Advertisment

இப்படம் தொடர்பாக அண்மையில் சூர்யா வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் பட வசனங்களை அவர் பேசி ஒரு காட்சியாவது ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்க ஆசைப்படுவதாக தெரிவித்திருந்தார். இவரை தொடர்ந்து இப்படம் தொடர்பாக லைலா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது, “23 வருஷத்துக்கு முன்னாடி அமீர் என்னிடம் மௌனம் பேசியதே படத்தில் நடிக்க அழைத்தார். நான் ஆர்வமாக இருந்தேன். ஏனென்றால் என்னுடைய ஹீரோ சூர்யா நடிக்கிறார். அவரோடு த்ரிஷாவும் நடிக்கிறார். அவர்களுடன் நடிப்பது மகிழ்ச்சியாக இருந்தது. 

இப்போது 23 வருடங்கள் கழித்து படம் காதலர் தினத்திற்காக பிப்ரவரி 13ஆம் தேதி ரீ ரிலீஸாகிறது. இந்த படமும் முழுக்க முழுக்க ஒரு காதல் படம் தான். சரியான நேரத்தில் இப்படம் வெளியாவதால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நீங்களும் தியேட்டரில் பார்த்து என்ஜாய் பண்ணுவீங்க என நினைக்கிறேன்” என்றார். மேலும் பட டயலாக்கான ‘நான் உன்னை மறக்கவும் மாட்டேன், நினைக்காம இருக்கவும் மாட்டேன்’ பேசினார். 

Actress actor suriya
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe