Advertisment

சீரியல் நாயகன் சினிமாவில் வென்றாரா ? - 'குமார சம்பவம்' விமர்சனம்!

1

சீரியலில் இருந்து நடிகர்கள் வெள்ளித்திரைக்கு வந்து ஹீரோவாக மாறும் காலம் தற்போது அதிகமாக இருக்கிறது. அந்த வரிசையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கும் இந்த குமார சம்பவம் திரைப்படம் எந்த அளவு வரவேற்பை பெற்றிருக்கிறது? 

Advertisment

சினிமாவில் ஒரு பெரிய இயக்குனராக மாற வேண்டும் என்ற கனவோடு வலம் வருகிறார் நாயகன் குமரன். ஒரு நாள் அவர் வீட்டு மாடியில் தங்கி இருக்கும் சமூக சேவகர் குமரவேல் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அவர் எப்படி இறந்தார் என போலீஸ் துப்பு துலக்குகிறது. இதற்காக அந்த வீட்டில் இருக்கும் அனைவரையும் போலீசார் விசாரிக்கின்றனர். போலீசாரின் பார்வை நாயகன் குமரன் மேல் விழ அவர் போலீசுடன் இணைந்து கொண்டு கொலையாளியை கண்டுபிடிக்கும் வேலையில் இறங்குகிறார். இறுதியில் குமரவேலை யார் கொலை செய்தது? அவர் இறப்புக்கு பின்னால் இருக்கும் மர்மம் என்ன? குமரன் இயக்குனர் ஆனாரா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீது கதை. 

ஒரு மர்டர் மிஸ்டரி கதையை வைத்துக்கொண்டு அதனை டார்க் காமெடி படமாக கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால். படம் ஆரம்பித்தது முதல் சாதாரண படமாகவே நகர்ந்து போகப் போக கதைக்குள் பயணித்து பின் இரண்டாம் பாதியில் இருந்து வேகம் எடுத்து பரபரப்பாக விறுவிறுப்பாக நகர்ந்து சிறப்பான டார்க் காமெடி மர்டர் மிஸ்டரி படமாக இந்த குமார சம்பவம் படம் அமைந்திருக்கிறது. முதல் பாதியை காட்டிலும் இரண்டாம் பாதியை விறுவிறுப்பாகவும் திருப்பங்கள் நிறைந்தும் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால். முதல் பாதையில் கதை ஸ்டேஜிங்க்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் கதைக்குள் வேகமாக செல்லாமல் அதே சமயம் அயற்சியும் இல்லாமல் நகர்ந்து இரண்டாம் பாதியில் இருந்து கதைக்குள் செல்லும் திரைப்படம் விறுவிறுப்பாக கலகலப்பாக நகர்ந்து படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது. இரண்டாம் பாதியில் இருந்த திரைக்கதை வேகம் முதல் பாதியிலும் இருந்திருந்தால் இந்த படம் இன்னமும் சிறப்பாக அமைந்திருக்கும். 

2

Advertisment

பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் நாயகனாக அறிமுகமாகி இருக்கும் இந்த படத்தில் தனக்கு என்ன வருமோ அந்த நடிப்பை சிறப்பாக கொடுத்து இருக்கிறார். வழக்கமான நாயகியாக வரும் பாயல் ராதாகிருஷ்ணன் வழக்கமான நடிப்பை கொடுத்துவிட்டு வந்த வேகத்தில் சென்று விடுகிறார்.  நாயகனின் தங்கையாக வரும் நடிகை தாரணி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஹோம்லி லுக்கில் அழகாக இருக்கும் அவர் நடிப்பையும் அழகாக கொடுத்து பளிச்சிடுகிறார். இவரது எதார்த்தமான நடிப்பு கவனம் பெற்று இருக்கிறது. சமூக சேவகராக வரும் குமரவேல் வழக்கம் போல் தனக்கு என்ன வருமோ அதை சிறப்பாக செய்து கைத்தட்டல் பெற்று இருக்கிறார். உடன் நடித்திருக்கும் தாத்தா ஜி எம் குமார் தனது அனுபவம் நடிப்பின் மூலம் கவர்ந்திருக்கிறார். சிபிஐ அதிகாரியாக வரும் வினோத் சாகர் வரும் காட்சிகள் கலகலப்பின் உச்சம். இவர் வரும் காட்சிகளில் எல்லாம் தியேட்டரில் சிரிப்பு சத்தங்களால் அதிர்கிறது. முக்கிய பாத்திரத்தில் வரும் சிவா ஆனந்த் வினோத் முன்னா உட்பட பலர் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்தை கலகலப்பாக வைத்துக் கொள்ள உதவியிருக்கின்றனர். 

3

அச்சு ராஜாமணி இசையில் பாடல்கள் ஓகே பின்னணி இசை நன்று. ஜெகதீஷ் ஒளிப்பதிவில் படத்தின் கலர் டோன் வித்தியாசமாக இருக்கிறது. அது ரசிக்கும்படியும் படத்தை நேர்த்தியாக படம் பிடித்து காட்டி இருக்கிறது.  இரண்டாம் பாதியில் இருந்த விறுவிறுப்பும் திரைக்கதை நேர்த்தியும் முதல் பாதியில் இருந்தே ஆரம்பித்து இருந்தால் இந்த படம் இன்னமும் ஒரு சிறப்பான டார்க் காமெடி மர்டர் மிஸ்டரி படமாக மாறி இருக்கும். மற்றபடி படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை ஆங்காங்கே சிறிது வேகத்தடைகள் இருந்தாலும் பெரும்பாலான காட்சிகள் ரசிக்கும்படி இருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. 

குமார சம்பவம் - சுமார் சம்பவம் இல்லை!

moviereview
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe