தனுஷ் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் கடந்த 20ஆம் தேதி வெளியான படம் ‘குபேரா’. தனுஷின் 51வது படமாக வெளியான இப்படம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்திருந்தது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். மேலும் பாலிவுட் நடிகர் ஜிம் சர்ப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிய இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். 

Advertisment

இப்படம் தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களே ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது.  இதனைத் தொடர்ந்து அண்மையில் படத்தின் சக்சஸ் மீட் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.  

Advertisment

இதனிடையே குபேரா படம்  முதல் இரண்டு நாளில் ரூ. 55 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்த நிலையில் தற்போது ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.