டெல்லியில் வழக்கமாக காற்று மாசுபாடு அதிகமாக இருக்கும் நிலையில் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகுகின்றனர். இதை கட்டுப்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். சமீபத்தில் போராட்டமும் நடத்தினர். இதற்கு அரசும், கிரேடட் ரெஸ்பான்ஸ் ஆக்ஷன் பிளானை செயல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, தனியார் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே பணி உள்ளிட்ட நடவடிக்கைகளை சமீபத்தில் மேற்கொண்டது.
இந்த நிலையில் நடிகை க்ரித்தி சனோன் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “இது தொடர்பாக நான் எதை சொன்னாலும் அது உதாவது என நினைக்கிறேன். ஆனாலும் இது மோசமாகிக் கொண்டே போகிறது. நான் டெல்லியைச் சேர்ந்தவள் என்பதால், கடந்த காலத்தில் அது எப்படி இருந்தது என எனக்குத் தெரியும். அதனால் அதை தடுக்க ஏதாவது செய்ய வேண்டும். இல்லையென்றால், அவை நம் அருகில் நிற்பவரைக் கூடப் பார்க்க முடியாத அளவுக்கு சென்றுவிடும்” என்றார். இதனை டெல்லியில் நடந்த ‘தேரே இஷ்க் மே’ பட புரொமோஷனில் தெரிவித்தார்.
‘தேரே இஷ்க் மே’ படம் வரும் 28ஆம் தேதி வெளியாகிறது. இதில் தனுஷ் நாயகனாக நடித்துள்ளார். ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ள இப்படத்தை ‘ஏ கலர் எல்லோ புரொடைக்ஷன்’ தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்தியை தாண்டி தமிழ் மற்றும் தெலுங்கில் டப் செய்து வெளியாகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/24/15-26-2025-11-24-16-27-25.jpg)