கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வா வாத்தியார்’. இதில் நாயகியாக தெலுங்கு இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், சத்யராஜ், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இப்படம் வரும் 12ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் பட நாயகி க்ரித்தி ஷெட்டி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரது கதாபாத்திரம் குறித்து பேசுகையில், “படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மர்மம் நிறைந்ததாக இருக்கும். ஆன்மாக்களை படிக்கும் ஒரு கதாபாத்திரம். இது போன்ற ஒரு கதாப்பாத்திரம் இந்திய சினிமாவில் நான் பெரிதாக பார்த்ததில்லை” என்றார்.
மேலும் படம் குறித்து பேசிய அவர், “எம்.ஜி.ஆருக்கு இந்தப் படம் ஒரு சமர்பணமாக இருக்கும். அவரைப் பற்றி எல்லாருக்கும் தெரியும். ஆனால் இந்த தலைமுறையினருக்கு பெரிதாக தெரியாது. எனக்கு அவரை தனிப்பட்ட முறையில் மிகவும் பிடிக்கும். அவர் எப்போதும் மற்றவர்களுக்கு நல்லது பண்ண வேண்டும் என நினைப்பவராக கேள்வி பட்டிருக்கிறேன். சினிமா என்பது மிகப்பெரிய மீடியம். அதை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துவது நல்லது. அதை அவர் செய்திருக்கிறார்” என்றார்.
Follow Us