போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பின்பு சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த வழக்​கில் சட்​ட​விரோத பணப்​பரி​மாற்​றம் நடந்​திருப்​பதால் அமலாக்​கத் துறை ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் மீது வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இருவரையும் நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள அமலாக்​கத்​ துறை அலு​வல​கத்​தில் ஆஜராகு​மாறு அதி​காரி​கள் சம்​மன் அனுப்பியிருந்​தனர். ஆனால் ஸ்ரீகாந்த் சொன்ன தேதியில் ஆஜராகவில்லை. வேறொரு நாளில் ஆஜராக கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த நிலையில் கிருஷ்ணா இன்று ஆஜாரகும்படி அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்த நிலையில் தற்போது கிருஷ்ணா அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியிருக்கிறார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
Follow Us