நடிகர் கிருஷ்ணா தனது 25வது படத்தில் நடித்து வந்தார். இப்படத்தை மனுமந்தா கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்ரீ விஷ்ணு கிரியேஷன்ஸ் தயாரிக்கின்றனர். இயக்குநர் பாலாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் இப்படம் கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகிறது. இன்னும் படத்திற்கு தலைப்பு வைக்கவில்லை.2
இந்தப் படத்தின் மூலம் கழுகு படத்திற்கு பிறகு நடிகர் கிருஷ்ணா மற்றும் பிந்து மாதவி இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கேரளா மற்றும் குற்றாலம் பகுதிகளில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளது.
இப்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/24/09-38-2026-02-24-15-09-00.jpg)