நான் ஈ, புலி, போன்ற படங்களில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் கிச்சா சுதீப்.இவர் ஏற்கனவே கன்னடத் திரையுலகில் முன்னனி நடிகராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடித்த பல்வேறு படங்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, கடைசியாக வெளிவந்த மேக்ஸ் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தினை விஜய் கார்த்திகேயா இயக்கியிருந்தார். கிச்சாவின் 46 வது படமான இப்படம் வெற்றி பெற்றதைத்தொடர்ந்து, இவர்கள் கூட்டணியில் அடுத்த படமும் தாயாராகி வருகிறது.
"மார்க்" என பெயரிடப்பட்ட இப்படத்தில் தமிழின் முன்னணி நடிகரான யோகிபாபுவும் இணைந்துள்ளார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட யோகிபாபுவை " வண்டியை இன்ஸ்டால்மென்டில் வாங்கினால், நாம் பணத்தைத் தான் இன்ஸ்டால்மெண்ட்டில் தருகிறோம் ஆனால் அவர்கள் வண்டியை இன்ஸ்டால்மென்டில் தருவதில்லை, மொத்தமாகத் தான் தருகிறார்கள் ஆனால் இவர் படப்பிடிப்பிற்கு இன்ஸ்டால்மென்டில் வருகிறார்" என்று கூறி கிச்சா கிண்டல் செய்தார். இதை கேட்டு யோகிபாபு மட்டுமல்லாமல் அரங்கில் இருந்த அனைவரும் சிரித்து விட்டனர், இதற்கு பதிலளித்த யோகிபாபு, தான் மற்ற படப்பிடிப்பில் பிசியாக இருப்பதாகவும் அதனால் தான் இப்படியான சூழ்நிலை ஏற்பட்டதாகவும் கூறியிருந்தார்.
திரைப்பட தணிக்கை வாரியம் இப்படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியிருக்கும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. விஜய் கார்த்திகேயா மற்றும் கிச்சாவின் கூட்டணி ஏற்கனவே வெற்றிபெறுள்ள நிலையில், இவர்களுடன் யோகிபாபுவும் இணைந்திருப்பதால் இப்படம் தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெரும் எனவும் கூறப்படுகிறது.
Follow Us