இயக்குநர் சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்புவுக்கும் 2000-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அவந்திகா மற்றும் ஆனந்திதா என இரு பெண் பிள்ளைகள் இருக்கின்றன. இதில் மூத்த மகள் அவந்திகா சினிமாவில் நடிக்க விரும்புவதாக 2022ஆம் ஆண்டு குஷ்பு தெரிவித்திருந்தார். மேலும் லண்டனில் நடிப்பு படிப்பு முடித்துவிட்டதாகவும் அவரை நாங்கள் அறிமுகப்படுத்தவோ அல்லது பரிந்துரைக்கவோ மாட்டோம் எனக் கூறியிருந்தார். இதனால் இவரது அறிமுகம் எப்போது வரும் என ரசிகர்கள் மத்தியில் ஒரு பேச்சு இருந்தது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/14/47-2026-02-14-17-44-11.jpg)
இதையடுத்து கடந்த வருடம் ஒரு நகைக்கட விளம்பரத்தில் அவந்திகா நடித்திருந்தார். இந்த சூழலில் அவர் நடிக்கும் முதல் படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மலையாளத்தில் ‘ஆரம்பம்’ என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் அவந்திகா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவரோடு மூத்த நடிகை சரிதாவும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சுஜேஷ் இயக்கும் இப்படத்தில் அல்தாஃப் சலீம், இந்திரன்ஸ், விஜயராகவன், கலாபவன் ஷாஜோன் உட்பட பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இதன் பூஜை கேரளாவில் நடைபெற்றது. தமிழ் சினிமாவில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்பட்ட அவந்திகா மலையாள சினிமா மூலம் அறிமுகமாகிறார்.
Follow Us