'கே.ஜி.எஃப்' படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான யஷ், 'கே.ஜி.எஃப் 2'-க்குப் பிறகு மலையாள இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் ‘டாக்சிக்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம், கோவாவில் போதைப் பொருள் நடத்தும் ஒரு கும்பலை மையப்படுத்தி ஒரு ஆக்ஷன் நிறைந்த படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் தொடங்கி மும்பை, கர்நாடகா என பல்வேறு இடங்களில் நடந்தது. இப்படத்தில் இருந்து கடந்த யஷ் பிறந்தநாளான ஜனவரி 8ஆம் தேதி அவருக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழுவினர் ஒரு வீடியோவை வெளியிட்டனர். அதில் போதைப்பொருள் மற்றும் மது அருந்தும் கிளப்பிற்கு யஷ் செல்லும் காட்சி இடம் பெற்றிருந்தது.
முன்னதாக இப்படத்தின் ரிலீஸ் தேதி, இந்தாண்டு ஏப்ரல் 10ஆம் தேதி என அறீவிக்கப்பட்டது. ஆனால் அது தள்ளிப்போவதாக தகவல் அப்போது தகவல் வெளியான நிலையில் அதை உறுதிப்படுத்துவிதமாக பின்பு படக்குழு இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 19ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்தது. இந்த சூழலில் இப்படம் மீண்டும் தள்ளிப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் உலா வந்தது. இந்தத் தகவலை தற்போது படத் தயாரிப்பு நிறுவனம் மறுத்துள்ளது. அவர்கள் ஏற்கனவே அறிவித்தது போல் இன்னும் 140 நாட்களில் அடுத்த ஆண்டு மார்ச் 19ஆம் தேதி படம் வெளியாகும் என தெரிவித்துள்ளது.
மேலும் சில தகவல்கள் இப்படம் குறித்து வெளியாகிவுள்ளது. படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருவதாகவும் அடுத்த ஆண்டு ஜனவரியில் இருந்து முழு வீச்சாக ப்ரோமோஷன் பணிகள் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதோடு இப்படம் ஒரே சமயத்தில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்டு வருவதாகவும் வெளியாகும் போது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு இந்திய மொழிகளிலும் மற்றும் பல்வேறு வெளிநாட்டு மொழிகளிலும் வெளியாகச்வுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Follow Us