Advertisment

“அந்த வார்த்தையை தூக்கிட்டோமேன்னு வருத்தப்பட வேண்டாம்” - கீர்த்தி சுரேஷ்

15 (27)

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சந்துரு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ரிவால்வர் ரீட்டா’. இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ராதிகா சரத்குமார், சுனில், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம் டார்க் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. இப்படம் வருகிற 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

Advertisment

இந்த நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கீர்த்தி சுரேஷ் படம் மற்றும் படக்குழுவினர் தொடர்பாக தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் ராதிகா குறித்து பேசுகையில், “இந்த படத்தில் முதல் முறையாக ராதிகா மேடமுடன் நடிக்கிறேன். ஆனால் அவருடைய பேனரில் தான் ‘இது என்ன மாயம்’ படம் மூலம் அறிமுகமானேன். அதனால் ராதிகா மேடம் எனக்கு முன்னாடி இருந்தே பழக்கம். ஆனால் செட்டில் பயங்கர ஃபயராக இருப்பார். அவரை மாதிரி சீனியருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் ரொம்ப மகிழ்ச்சி. அவருக்கும் எனக்குமான கெமிஸ்ட்ரி இந்த படத்தில் ரொம்ப அழகாக வந்திருக்கு” என்றார். 

Advertisment

பின்பு சென்ராயன் குறித்து பேசிய கீர்த்தி சுரேஷ், அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறி அவருக்கு நன்றி தெரிவித்தார். பின்பு அவரை பார்த்து பேசிய அவர், “நீங்க அந்த வார்த்தையை தூக்கிட்டோமேன்னு வருத்தப்பட வேண்டாம். அந்த வார்த்தையை கண்டிப்பாக வைக்க முடியாது. ஏனென்றால் பல பேர் பார்க்கிறார்கள். சென்சார் போர்டு மட்டுமில்லை, அதை யார் கேட்டாலும் தப்பாக இருக்கும். இருந்தாலும் நீங்க சொல்ல வருவது உங்க நடிப்பு மூலம் ஆடியன்ஸுக்கு புரிந்து விடும். அந்த ஒரு வார்த்தையால்தான் உங்கள் நடிப்பை விவரிக்க வேண்டும் என அவசியம் இல்லை. அது இல்லாமலும் நன்றாக இருக்கும்” என்றார். 

keerthy suresh
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe