மிஷ்கின், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘புரொடக்ஷன் 09’ என்ற தற்காலிகமான தலைப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது. இப்படத்தை பிரவீன் எஸ். விஜாய் என்பவர் இயக்குகிறார். ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
இது தொடர்பக கடந்த மாதம் அறிவிப்பு போஸ்டர் வெளியானது. அதில் செஸ் விளையாட்டின் குதிரை, ராஜா மற்றும் ராணி காய்கள் இடம் பெற்றிருந்தது. படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். கோர்ட் ரூட் டிராமாவாக இப்படம் உருவாகிறது.
இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இப்படத்தின் இயக்குநர் பிரவீன் எஸ் விஜய் இருவருக்கும் இன்று ஒரே நாளில் பிறந்த நாள் என்பதால் படக்குழுவினருடன் இருவரும் கேக் வெட்டி கொண்டாடினர். படக்குழுவினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.