Advertisment

கீர்த்தி சுரேஷிற்கு புதிய பொறுப்பு

17 (12)

இந்தியாவில் குழந்தைகள் நலனுக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறது யுனிசெஃப். இந்த அமைப்புடன் பிரபலங்களும் இணைந்து குழந்தைகளின் நலனுக்காக உதவி வருகின்றனர். இதுவரை அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர், பிரியங்கா சோப்ரா, ஆயுஷ்மான் குர்ரானா மற்றும் கரீனா கபூர் ஆகியோர் இந்திய யுனிசெஃபின் தூதராக இருக்கின்றனர். இந்த வரிசையில் தற்போது புதிதாக கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார். 

Advertisment

இது தொடர்பாக பேசிய அவர், “இந்தியாவில் குழந்தைகளுக்கான தூதராக யூனிசெஃபில் இணைவதில் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். இது எனக்கு மிகவும் முக்கியம் வாய்ந்தது. ஏனென்றால் ஒவ்வொரு குழந்தையும் ஆரோக்கியமாகவும் கற்றுக் கொள்ளவும் பெரிய கனவு காணவும் தகுதியானது. இதை சாத்தியமாக்க யுனிசெஃப், இந்தியாவில் கடந்த 26 ஆண்டுகளாக அயராத உழைத்து வருகிறது. மேலும் குழந்தைகளுக்கு கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் நிறைய வாய்ப்புகள் கிடைப்பதற்கு அரசுடனும் பல்வேறு அமைப்புகளுடனும் இணைந்து பணியாற்று வருகிறது. 

Advertisment

இந்த முக்கியமான பணியில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் பொறுப்பை என் மீது நம்பிக்கை வைத்து கொடுத்ததற்கு யுனிசெப் இந்தியாவிற்கு நன்றி. இந்த பயணத்தை தொடங்க நான் ஆர்வமாக இருக்கிறேன்” என்றுள்ளார். 

keerthy suresh UNICEF
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe