டிராகன் படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகை கயாடு லோஹர். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், இவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, இவர் ‘இதயம் முரளி’ என்ற படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். அதே நேரத்தில், ஜி.வி.பிரகாஷுடன் ‘இம்மார்டல்’ படத்திலும் நடித்து வருகிறார். மேலும், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், இளைஞர்களின் பிடித்தமான நடிகையாக மாறிப்போன கயாடு, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இதில், அவரிடம், “நீங்கள் மாற்றிக்கொள்ள நினைக்கும் விஷயம் எது” எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “நான் எளிதில் உணர்ச்சிவசப் படக்கூடிய ஆள். அதனால், எந்த ஒரு விஷயத்திற்கும் எளிதில் மனம் உடைந்துவிடுவேன். அந்த தன்மையை மாற்றிக்கொண்டு உறுதி மிக்கவளாகவும், எந்த சூழலிலும் தடுமாற்றம் இல்லாதவளாய் மாற ஆசைப்படுகிறேன்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், தற்போது கயாடு நடித்துள்ள ‘பங்கி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவருடன், விஷ்வக்ஸன் இணைந்து நடித்துள்ளார். பீம்ஸ் செசீரொலியா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கே.வி.அனுதீப் இப்படத்தினை இயக்கியுள்ளார். வருகின்ற பிப்ரவரி 13ம் நாள் இப்படம் வெளியாக இருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் வெளியாகி, ரசிகர்களிடையே கவனம் பெற்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/06/05-19-2026-02-06-16-50-18.jpg)