கவின் - ஆண்ட்ரியா நடிப்பில் அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் ஆண்ட்ரியா மற்றும் சொக்கலிங்கம் தயாரிப்பில் உருவாகிவுள்ள படம் ‘மாஸ்க்’. இப்படத்தில் இயக்குநர் வெற்றிமாறன் மென்டராக பணியாற்றியுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இப்படம் வரும் 21 ஆம் தேதி வெளியாகியுள்ளது. 

Advertisment

இந்த நிலையில் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் விஜய் சேதுபதி, நெல்சன் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டனர். நிகழ்வில் கவின் பேசுகையில், “என் லைஃபில் நான் நம்பும் விசயம், அன்றன்று நாள் நல்லபடியாக போக வேண்டும் என்பது தான், அதில் செய்ய வேண்டியதையெல்லாம் செய்து முடித்தால், எல்லாம் நன்றாக நடக்கும் என நம்புகிறேன். விஜய் சேதுபதி அண்ணாவுக்கு நன்றி. அவரின் பீட்சா படத்தில் தான் நான் அறிமுகமானேன். நாம் விரும்புவதை விருப்பத்துடன்  செய்தால் அது நடக்கும் என நிரூபித்தவர். அவர் வந்து வாழ்த்தியதற்கு நன்றி. 

Advertisment

வெற்றிமாறன் சார் அவரெல்லாம் கூப்பிடுவார் என நான் நினைத்ததில்லை. அவர் ஆபிஸில் இருந்து கால் வந்தது. அவரே தான் கதை சொன்னார், அவரே கதை சொல்கிறார் என்றால் அவர் கதை மேல் வைத்திருக்கும் நம்பிக்கை எனக்கு முக்கியமாகப் பட்டது. உங்களை நம்பி வருகிறேன் பார்த்துக்கொள்ளுங்கள் என்றேன். இன்று வரை பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் மிக ஜாலியானவர் அவரை நான் நண்பராகவே நினைத்துவிட்டேன். அவர் சொக்கலிங்கம் சார் பற்றி மிகப்பெருமையாக சொன்னார். இந்தப்படம் ஜெயித்தே ஆக வேண்டும் என்றார், அது ஆடுகளம் இண்டர்வெல் மாதிரி இருந்தது. கண்டிப்பாகப் பந்தயம் அடித்துவிடுவோம் சார். 

ஆண்ட்ரியா மேடம் தான் முதலில் கதை கேட்டார். அவர் நடிப்பு மிகச்சிறப்பாகப் பேசப்படும். ஜீவி சார் இத்தனை வேலைகளை எப்படிச் செய்கிறார் என ஆச்சரியமாக இருக்கும். சார் உடலை பார்த்துக்கொள்ளுங்கள். விகர்னன் மிகச்சரியாகப் பேசினார். எல்லாவற்றையும் மிகச்சரியாகச் செய்து படத்தைக் காப்பாற்றித் தந்துள்ளார். பவன் சார், ரெடின் சார் நடிப்பு கண்டிப்பாக பேசப்படும். படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. நெல்சன் அண்ணன் வாழ்க்கையில் என்னைச் சரியாக வழிநடத்தி என்னைக் கூட இருந்து பார்த்துக் கொள்வதற்கு நன்றி. நவமபர் 21 படம் திரைக்கு வருகிறது. அனைவரும் பார்த்து ரசிப்பீர்கள் என நம்புகிறேன் நன்றி” என்றார். 

Advertisment