கவின் - ஆண்ட்ரியா நடிப்பில் அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் ஆண்ட்ரியா மற்றும் சொக்கலிங்கம் தயாரிப்பில் உருவாகிவுள்ள படம் ‘மாஸ்க்’. இப்படத்தில் இயக்குநர் வெற்றிமாறன் மென்டராக பணியாற்றியுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இப்படம் வரும் 21 ஆம் தேதி வெளியாகியுள்ளது.
இப்படம் வெளியகும் அதே தேதியில் முனீஷ்காந்த், விஜயலட்சுமி நடித்த ‘மிடில் கிளாஸ்’ படமும் வெளியாகவுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ளார். ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் குட் ஷோ நிறுவனங்கள் தயாரித்துள்ளன. பிரனவ் முனிராஜ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இரு படக்குழுவினரும் தற்போது புரமோஷன் பணிகளில் இறங்கியுள்ளனர். அந்த வகையில் திருப்பூரில் ஒரு திரையரங்கில் இரு படக்குழுவினரும் பார்த்துக் கொண்டனர். அதாவது மிடில் கிளாசில் படத்தில் இருந்து முனீஷ்காந்தும் மாஸ்க் படக்குழுவினடமிருந்து கவின் மற்றும் இயக்குநர் விகர்ணன் அசோக் இருவரும் சந்தித்து பேசினர். பின்பு மூன்று பேருமே செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது கவின் பேசுகையில், “இரண்டு படங்களுமே 21ஆம் தேதி ரிலீஸாவுது. இதுல ஒற்றுமை என்னென்னா எங்க கதை தான் அவங்க டைட்டிலே. அவங்க டைட்டில் தான் எங்க கதையே. கண்டிப்பா இரண்டு படங்களுமே உங்களுக்கு பிடிக்கும்” என்றார்.
Follow Us