கவின் - ஆண்ட்ரியா நடிப்பில் அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் உருவாகிவுள்ள படம் ‘மாஸ்க்’. இப்படத்தில் நடித்ததோடு முதல் முறையாக சொக்கலிங்கம் என்பவருடன் இணைந்து இப்படத்தை ஆண்டிரியா தயாரித்துள்ளார். இப்படத்தில் இயக்குநர் வெற்றிமாறன் மென்டராக பணியாற்றியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது கவினிடம் ஒரு செய்தியாளர் நீங்கள் நடப்பது விஜய் சார் போலவே இருக்கிறதாக கருத்துக்கள் வருகிறதே என கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த கவின், “நான் அன்னைக்கு கால் வலிக்குதுன்னு மெதுவா நடந்தேன். அவங்கவங்க வசதிக்கேற்ப ஏதாவது சொல்லிக்கிட்டாங்கனா நான் என்ன பண்ண முடியும்” என்றார். பின்பு இன்னொரு செய்தியாளர், விஜய், சிவகார்த்திகேயன் இடத்தை நோக்கி நீங்கள் நகர்கிறீர்களே என கேள்வி கேட்டார். உடனே கவின் கையெழுத்து கும்பிட்டு அந்த செய்தாளரிடம் வணக்கம் சொன்னார்.
பின்பு அவரிடம் படத்தில் இளையராஜா பாடல் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கவின், “அதை எடிட்டில் முடிவு செய்தோம்” என சொன்னார். உடனே அருகில் இருந்த இயக்குநர், “இளையராஜா பாடல் இருந்தால் எப்படி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அது அவருடைய ஒரு ஆசீர்வாதம் தான். அவரிடம் அனுமதி பெற்று தடையில்லா சான்றிதழ் வாங்கி தான் பயன்படுத்தினோம். இதையடுத்து கவினிடம் படத்தில் நடித்தது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த கவின், “இந்த படத்தின் கிளைமாக்ஸில் வரும் 20 நிமிட காட்சிக்காகத்தான், நான் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஏனென்றால் இந்த படம் ஒரு சாதாரண மனிதனுக்கான படம். அவங்களைத் தாண்டி இங்கு எதுவுமே கிடையாது. அவங்க தான் அதிகார வர்க்கத்தை முடிவு செய்வார்கள். அந்த விஷயம் தான் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதுதான் கதையிலும் புதிதாக தெரிந்தது. 10 பேரை அடிப்பது ஒரு விதமான ஹீரோயிஸம் என்றால், நல்லவங்களை காப்பாற்றுவதும் ஒரு ஹீரோயிஸம் தான்” என்றார்.
Follow Us