நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் கவின், ப்ரீத்தி அஸ்ரானி ஜோடியாக நடித்துள்ள படம் ‘கிஸ்’. ரோமியோ பிக்சர்ஸ் பேனரில் ராகும் தயாரித்துள்ள இப்படத்தில் விடிவி கணேஷ், ஆர்ஜே விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். இவரது இசையில் அனிருத் குரலில் வெளியான ‘திருடி’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இப்படம் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் கடந்த மாதம் 19ஆம் தேதி இப்படம் வெளியாகியிருந்தது. ஃபேண்டஸி ஜானரில் காதல் காமெடி கலந்த வெளியாகியிருந்த இப்படம் கலவையான விமர்சனத்தையே ரசிகர்களிடம் பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஜீ5 ஒடிடி தளத்தில் நவம்பர் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை அடுத்து கவின் நடித்துள்ள ‘மாஸ்க்’ படமும் அடுத்த மாதம் 27ஆம் தேதி வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/30/01-1-2025-10-30-19-57-07.jpg)