புதுச்சேரி அரசின் திரைப்பட விழா வரும் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் 2024 மற்றும் 2025 ஆண்டுகளுக்கான ‘சங்கரதாஸ் சுவாமிகள்’ எனும் விருதுகள் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் 2024ஆம் ஆண்டிற்கான சிறந்த இயக்குநருக்கான விருது 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்திற்காக கார்த்திக் சுப்பராஜுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டிற்கான சிறந்த இயக்குநருக்கான விருது ‘கடல் கன்னி’ படத்திற்காக தினேஷ் செல்வராஜுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் படம் '2023ஆம் ஆண்டில் வெளியான படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. இப்படத்தை கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கதிரேசன் தயாரித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசை பணிகளை மேற்கொண்டிருந்தார். பழங்குடியின மக்களை சுற்றி நடக்கும் அரசியலை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.
Follow Us