இயக்குநர் ரத்னகுமார் ‘29’ எனும் தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். இதில் நாயகனாக விது மற்றும் நாயகியாக ப்ரீத்தி அஸ்ராணி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், செனஸ் பாத்திமா, பிரேம்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். 

Advertisment

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. இதையொட்டி நடந்த விழாவில் கார்த்திக் சுப்புராஜ் கலந்து கொண்டு பேசுகையில், “இந்தக் கதையை ரொம்ப வருஷம் முன்னாடி ரத்னா சொல்லியிருக்கார். தனுஷ் சாரிடமும் இந்தை கதையை சொன்னோம். அவருக்கும் ரொம்ப பிடித்திருந்தது. ஆனால் இது இளமை காலத்தில் பண்ண வேண்டிய படம் என்று ஒரு இளம் நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். தனுஷ் சாரிடம் போய்விட்டு வந்ததால் இக்கதையை ஒரு நல்ல நடிகர் நடித்தால் தான் சரியாக இருக்கும் என நினைத்தோம். அதனாலே சில வருஷங்கள் வெயிட் பன்னோம். பின்பு படக்குழு விதுவை சமீபத்தில் ஆடிஷன் செய்துவிட்டு அவரையே பன்ன வைக்கலாம் என சொன்னார்கள். இதை ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ரெட்ரோ படங்களுக்கு முன்னாடி சொல்லியிருந்தால் வேண்டாம் என சொல்லியிருப்பேன். ஆனால் அதன் பிறகு சொன்னதால் எனக்கும் அவர் சரியாக இருப்பார் என தோன்றியது. 

Advertisment

நான் விதுவை சின்ன வயதில் பார்த்திருக்கிறேன். அப்போது நான் படம் பண்ணவில்லை. சில பசங்களை பார்த்தால் அடிக்கனும் என தோன்றும், அந்த மாதிரி அவன் இருந்தான். நக்கலாக நீங்க படம் பன்னுவீங்களா எனக் கேட்டான். டேய்... போடான்னு சொல்லிவிட்டேன். அப்புறம் லண்டனுக்கு போய் படித்துவிட்டு திரும்ப வந்து நடிகராக ஆகப்போறேன்னு சொன்னான். அப்பவும் இது உனக்கு தேவையில்லாத வேலை என சொல்லி அனுப்பிவிட்டேன். பின்பு ஆக்டிங் ட்ரெயினிங் போய்விட்டு பேட்ட படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டான். அதில் சின்ன ரோலில் நடித்திருப்பான். 

பின்பு இன்னொரு கட்சியில் ரஜினியுடன் நடித்திருப்பான். ஆனால் அது டெலிட் செய்யப்பட்ட காட்சி. அந்த காட்சியில் ரஜினி இவனை கில்லனும்... அன்றைக்கு கடைசி காட்சி என்பதால் வேகமாக அதை எடுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இவனால் 3 ரீடேக் போனது. ரஜினியே யார் இவன் என்று கேட்டார். அந்தப் படம் முடிந்த பின்பு அவனை வேற ஏதாவது வேலைக்கு சென்று விடு என்றேன். ஆனால் அதை அவன் பர்சனலாக எடுத்துக் கொண்டான். பின்பு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பண்ணும் போது சட்டாணி கேரக்டருக்கு ஒரு புது முகத்தை தேடிக் கொண்டிருந்தேன், அதே சமயம் நல்ல நடிகராகவும் எதிர்பார்த்தேன் அப்போது இதை நான் செய்கிறேன் என வந்தான். பின்பு ஆடிஷன் செய்த போது அவன் நடிப்பை பார்த்து மிரண்டு போனேன். இத்தனை வருடமாக நடிப்பில் அவன் போட்ட உழைப்பு அசாத்தியமானது. அதனால் அவன் 29 படத்தில் நடிக்கிறான் என சொல்லும்போது எனக்கு பயங்கர நம்பிக்கை இருந்தது” என்றார்.

Advertisment