இயக்குநர் ரத்னகுமார் ‘29’ எனும் தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். இதில் நாயகனாக விது மற்றும் நாயகியாக பிரீத்தி அஸ்ராணி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், செனஸ் பாத்திமா, பிரேம்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். 

Advertisment

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. இதையொட்டி நடந்த விழாவில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், “ரத்தினகுமார் ஒரு நல்ல ரைட்டர் மற்றும் டைரக்டர். நிறைய விஷயங்கள் பேசுவார். அதில் எனக்குப் பிடிக்காததையும் பேசியிருக்கார். இருந்தாலும் அவரை என் குடும்பத்தில் ஒருவர் போல் நினைத்து மீண்டும் அவரை கூப்பிட்டு ஸ்கிரிப்டில் கவனம் செலுத்த சொன்னேன்” என்றார். 

Advertisment

முன்னதாக லியோ பட வெற்றி விழாவில் ரத்னகுமார் பேசிய காக்கா, கழுகு பேச்சு விவாதத்தை கிளப்பியது. இவர் தீவிர விஜய் ரசிகர் என்பதும் கார்த்திக் சுப்புராஜ் தீவிர ரஜினி ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.