கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வா வாத்தியார்’. இதில் நாயகியாக தெலுங்கு இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், சத்யராஜ், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியும் நடைபெற்றது. படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. இரண்டு வருடங்களுக்கு மேலாக தயாரிப்பில் இருந்த இப்படம் ஒருவழியாக ரிலீஸுக்கு தயாராகியுள்ளதாக ரசிகர்களும் ஆர்வமாக இருந்தனர். குறிப்பாக எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இப்படம் எம்.ஜி.ஆரை மையப்படுத்தி உருவாகியிருந்ததால் கூடுதல் ஆவலோடு இருந்தனர்.
ஆனால் இப்படம் கடந்த சில வாரங்களாக சிக்கலில் இருந்து வந்தது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தொழிலதிபர் அர்ஜூன் லால் சுந்தர் தாஸ் என்வரிடம் இருந்து பெற்ற கடன் தொடர்பான வழக்கில் கடனை வட்டியுடன் திருப்பி செலுத்தும் வரை படத்தை வெளியிடக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த உத்தரவை நேற்று நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. இதனால் படம் அறிவித்த தேதியில் வெளியாகுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. இருப்பினும் படக்குழுவினர் நேற்று வரை 12ஆம் தேதி வெளியாகும் என அறிவித்து வந்தது.
இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது படக்குழு ஒரு ப்ரோமோ வெளியிட்டுள்ளது. அதில் தேதி குறிப்பிடாமல் விரைவில் படம் வெளியாகும் என தெரிவித்துள்ளது. இதனால் இப்படம் மீண்டும் தள்ளிப் போகிறது. ஏற்கனவே கடந்த 5ஆம் தேதி வெளியாவதாக இப்படம் அறிவிக்கப்பட்டு 12ஆம் தேதி மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/11/15-36-2025-12-11-17-16-25.jpg)