கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் பொங்கலை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி வெளியான படம் ‘வா வாத்தியார்’. இதில் நாயகியாக தெலுங்கு இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார்.
மேலும் ராஜ்கிரண், சத்யராஜ், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். எம்.ஜி.ஆரை மைய்யப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஏற்கனவே இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை பெற்ற அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வரும் 28ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/27/07-20-2026-01-27-18-51-53.jpg)