கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வா வாத்தியார்’. இதில் நாயகியாக தெலுங்கு இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், சத்யராஜ், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு மே மாதம் வெளியானது. 

Advertisment

இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பரில் படத்தின் டீசர் வெளியானது. அதை பார்க்கையில் எம்.ஜிஆர். ரசிகராக கார்த்தி நடித்துள்ளது தெரிய வந்தது. பின்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘உயிர் பத்திக்காம’ பாடல் கடந்த பிப்ரவரியில் வெளியாகியிருந்தது. இப்படத்தின் அறிவிப்பு 2023ஆம் ஆண்டு வெளியாகியிருந்த நிலையில் அதற்கடுத்து ஒவ்வொரு அப்டேட்டும் தாமதமாகவே வெளியாகி வருகிறது. அதன் படி கடந்த செப்டம்பர் மாதம் இப்படம் வருகின்ற டிசம்பரில் 5ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. மாறாக வரும் 12ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இப்படத்தை வெளியிட தடை கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. படத்தின் தயாரிப்பு நிறுவனம் வாங்கிய கடன் தொடர்பாக தொடரபட்ட இந்த வழக்கில் படத்தை வெளியிட இடைக்காலத் தடை வித்தித்து விசாரணையை ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம். 

Advertisment

இதனிடையே படத்தின் இரண்டாவது சிங்கிள் மற்றும் மூன்றாவது சிங்கிளை படக்குழு வெளியிட்டது. அதில் படம் வருகின்ற 12ஆம் தேதி வெளியாகும் என்பதை உறுதி செய்திருந்தது. இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. எம்.ஜி.ஆர் ஆசியுடன் என போடப்பட்டு ட்ரெய்லர் தொடங்குகிறது. கார்த்தி போலீஸ் அதிகாரியாக வருகிறார். மேலும் அவரது தாத்தாவாக தெரியும் ராஜ் கிரண் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராக வருகிறார். சூது கவ்வும் படத்தின் வரும் நாயகி கதாப்பாத்திரம் போல் ஃபேண்டஸியான கதாபாத்திரத்தில் நாயகி க்ரீத்தி ஷெட்டி வருகிறார். ஃபேண்டஸி ஜானரில் காமெடி, அரசியல் கலந்த ஒரு படமாக இப்படம் தெரிகிறது. இறுதியில் ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை’ என்ற எம்.ஜி.ஆர். பாடலுடன் எம்.ஜி.ஆர். கெட்டப்பில் கார்த்தி வருகிறார். இப்படம் வரும் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.