கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வா வாத்தியார்’. இதில் நாயகியாக தெலுங்கு இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், சத்யராஜ், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு மே மாதம் வெளியானது. அதில் போலீஸ் கெட்டப்பில் கார்த்தி இடம் பெற்றிருந்தார். 

Advertisment

இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பரில் படத்தின் டீசர் வெளியானது. அதை பார்க்கையில் எம்.ஜிஆர். ரசிகராக கார்த்தி நடித்துள்ளது தெரிய வந்தது. பின்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘உயிர் பத்திக்காம’ பாடல் கடந்த பிப்ரவரியில் வெளியாகியிருந்தது. இப்படத்தின் அறிவிப்பு 2023ஆம் ஆண்டு வெளியாகியிருந்த நிலையில் அதற்கடுத்து ஒவ்வொரு அப்டேட்டும் தாமதமாகவே வெளியாகி வருகிறது. அதன் படி கடந்த செப்டம்பர் மாதம் இப்படம் வருகின்ற டிசம்பரில் ரிலீஸாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் எந்த தேதி என அறிவிக்கவில்லை. இதையடுத்து அடுத்த மாதமான அக்டோபரில் டிசம்பர் 5ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

Advertisment

ஆனால் இப்படம் தள்ளி போகவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது அதாவது படத்தின் இறுதிக் கட்டப்படப்பிடிப்பு இன்னும் முடியவில்லையாம். அது நடந்து வருவதாக தெரியும் சூழலில் அனைத்து பணிகளும் முடிந்து அறிவித்த படி டிசம்பர் 5ஆம் தேதி வெளியாக வாய்ப்பு கம்மி என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால் பட டிஜிட்டல் உரிமையை பெற்ற ஓடிடி நிறுவனம், படம் டிசம்பரில் வெளியானால் மட்டுமே ஓடிடி உரிமையை பெற்றுக்கொள்வதாக கண்டிஷனாக சொல்லியுள்ளதாம். இதனால் பட வேலைகள் தீவிரமாகியுள்ளதாகவும் தகவல் வெளியானது, 

இந்த நிலையில் பட ரிலீஸ் குழப்பத்திற்கு தீர்வு கிடைத்துள்ளது. படத்தின் தெலுங்கு தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘அன்னகாரு வோஸ்டாரு’ என்ற தலைப்பில் வெளியாகவுள்ளதாக புதுப் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்த படக்குழு டிசம்பரில் படம் வெளியாகும் என தெரிவித்துள்ளது. ஆனால் தேதி குறிப்பிடவில்லை. இதனால் தெலுங்கு வெர்ஷன் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகவில்லை என்பது உறுதியாகியுள்ள நிலையில் தமிழ் பதிப்பு அறிவித்த படி அதே தேதியில் வெளியாகுமா என்ற குழப்பம் நீடித்து வருகிறது. 

Advertisment