Advertisment

நடிகர் சங்க கட்டிடம் எப்போது முடியும்? - கார்த்தி பதில்

20 (26)

கார்த்தி தற்போது கைவசம் ‘வா வாத்தியார்’, ‘சர்தார் 2’, ‘மார்ஷல்’ ஆகிய படங்களை வைத்துள்ளார். இதில் ‘வா வாத்தியர்’ படம் வரும் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. சர்தார் 2 படம் படப்பிடிப்பு முடிந்து போஸ் புரொரடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. மார்ஷல் படம் படப்பிடிப்பில் இருக்கிறது. 

Advertisment

இந்த நிலையில் கார்த்தி திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், “மார்ஷல் பட ஷூட்டிங் இங்க தான் போய்ட்டு இருக்கு. இதுவரை ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்ததே இல்லை. முதல் முறையா வந்திருக்கேன். அருமையான அனுபவமா இருந்துச்சு. அடுத்த வாரம் ஒரு படம் ரிலீஸாகுறதால வேண்டிருக்கேன்” என்றார். 

Advertisment

பின்பு அவரிடம் நடிகர் சங்கம் எப்போது முடியும் என்ற கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர், இன்னும் மூன்று மாதத்தில் முடிந்துவிடும் என்றார். பின்பு விஜய்யின் அரசியல் வருகை குறித்தான கேள்விக்கு ரொம்ப சந்தோஷம் என பதில் கூறினார். 

actor karthi Srirangam
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe