கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் பொங்கலை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி வெளியான படம் ‘வா வாத்தியார்’. இதில் நாயகியாக தெலுங்கு இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், சத்யராஜ், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். எம்.ஜி.ஆரை மைய்யப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் திருச்சியில் கார்த்தி தியேட்டர் விசிட் அடித்துள்ளார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், “பல தடைகளை தாண்டி படம் ரிலீஸாகியிருக்கிறது. படம் ஒரு வித்தியாசமான கதை. எம்ஜிஆரை மீண்டும் திரைக்கு கொண்டு வந்திருக்கிறது. அதில் எங்களுக்கும் பெரிய சந்தோஷம். படத்தை குடும்பத்தோடு அனைவரும் வந்து ரசிக்கிறார்கள். நலன் குமாரசாமியின் பூர்வீகம் திருச்சி தான். அவர் ஊரில் வந்து படம் பார்ப்பது மகிழ்ச்சி. ரொம்ப வருடம் கழித்து திருச்சிக்கு வந்திருக்கிறேன்” என்றார்.
பின்பு அவரிடம் லோகேஷ் கனகராஜ் அல்லு அர்ஜனை வைத்து படம் இயக்க போய்விட்டதால் கைதி 2 எந்த நிலையில் இருக்கிறது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “அதை அவரே சொல்வார்” என முடித்து விட்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான படம் கைதி. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம், இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக படக்குழு முன்பே தெரிவித்திருந்து தள்ளிப் போய்கொண்டே போனது. பின்பு கடந்த டிசம்பரில் பணிகள் தொடங்கப்படும் என தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு கூறியிருந்தார். ஆனால் தொடங்கப்படவில்லை. இப்போது எந்த அப்டேட்டும் இல்லாமல் இருக்கிறது. அதனால் கார்த்தியும் இப்படி சொல்லிவிட்டதால் லோகேஷ் பதிலை எதிர்நோக்கி காத்திருக்க்கின்றனர் கைதி பட ரசிகர்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/17/11-33-2026-01-17-18-58-53.jpg)