விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன் சென்னை உயர்நீதி மன்றத்தில் அவசர வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் விசாரணையில் யு/ஏ சான்றிதழ் வழங்கக்கோரி நீதிபதி ஆஷா தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது. இதை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, நீதிபதி ஆஷா வழங்கிய உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. மேலும் வழக்கு விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இதை தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என மேல்முறையீடு மணு தாக்கல் செய்தது. இதை அடுத்து தணிக்கை வாரியம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தது.
இந்த நிலையில் கார்த்தி இப்படம் குறித்து பேசியுள்ளார். அவர் நடித்த வா வாத்தியார் படம் பொங்கலை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளதால் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “சில நேரங்களில் வீட்டில் சோகமாக உட்கார்ந்து இருக்கும் போது, அப்பா எல்லாம் நன்மைக்கே என சொல்வார். அப்போது அது புரியாது. ஆனால் இப்போது புரிகிறது. எல்லாத்துக்குமே ஒரு பிளான் இருக்கிறது. விஜய் சாரின் ஜனநாயகன், தாமதமாக மாறியிருந்தாலும் மிகச் சரியான நேரத்தில் வெளியாகும். அதற்கு காலம் சரியான நேரம் கொண்டு வரும். ஏனென்றால் காலம் நிறைய விஷயங்களை வடிவமைக்கிறது. அந்த வகையில் இந்த பொங்கலுக்கு ரிலீசாகி இருக்கிற ஆகப் போகிற எல்லா படங்களும் வெற்றி பெற வேண்டும்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/14/14-41-2026-01-14-16-54-54.jpg)