பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘மார்கழியில் மக்களிசை’ என்ற தலைப்பில் கடந்த ஐந்து வருடங்களாக கலை நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்நிகழ்வு நாட்டுப்புற இசை, கானா, ஒப்பாரி உள்ளிட்ட மேடை ஏற்ற தவறிய கலைகளை கௌரவிக்கும் விதமாக அரங்கேற்றப்படுகிறது.  
 
அந்த வகையில் இந்த ஆண்டு 6ஆம் ஆண்டு மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி இன்று முதல் தொடங்குகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் என மொத்தம் மூன்று நாட்கள் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இந்த விழா நடக்கிறது. இதில் மக்கள் இசை மாமணி என்ற பெயரில் சிறப்பாக ஒரு விருதையும் வழங்குகிறார்கள். இது இசையில் அதிக பங்களிப்பை செலுத்திய இசை கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்விருதை இந்த ஆண்டு ராஜா ராணி ஆட்டக்கலை கலைஞரும் ஒப்பாரி பாடகருமான தருமாம்மாள் மற்றும் நாதஸ்வரம் கலைஞர் எஸ் மூர்த்தி ஆகிய இருவருக்கும் வழங்கப்படுகிறது.

Advertisment

05 (12)

இதன் தொடக்க விழா இன்று தொடங்கிய நிலையில் சிறப்பு விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இயக்குநர்கள் வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் பறை இசையடித்து விழாவை தொடங்கி வைத்தனர். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisment