Advertisment

‘நண்பர் மம்முட்டி’ இப்போது ‘பத்மபூஷன் மம்முட்டி’ - பிரபலம் நெகிழ்ச்சி

02 (3)

ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு, கலைத்துறை உட்பட பலத்துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்குவது வழக்கம். அந்த வகையில், நேற்று (26-01-26), 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு,  2026 ஆம்  ஆண்டிற்கான பத்மபூஷன், பத்மவிபூஷன் மற்றும் பத்மஸ்ரீ போன்ற இந்தியாவின் உயரிய விருதுகள் அறிவிக்கப்பட்டன.  அதில், பத்மபூஷன் விருது 13 பேருக்கும், பத்மவிபூஷண் விருது 5 பேருக்கும், பத்ம ஸ்ரீ விருது 113 பேருக்கும் என அறிவிப்புகள் வெளியாகின.  

Advertisment

இதில் தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகரான மம்முட்டிக்கும் ‘பத்மபூஷன்’ விருது அறிவிக்கப்பட்டது. இதற்குத் தென்னிந்திய நடிகர்கள் மட்டுமல்லாமல், பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதற்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில், மம்முட்டி பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “இந்தியாவின் உயரிய விருதான பத்மபூஷன் விருதை, எனக்கு அளித்த இந்திய அரசிற்கும் , இந்த தேசத்திற்கும், இந்நாட்டு மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

மேலும், மம்மூட்டிக்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன், ‘நண்பர் மம்முட்டி’  தற்போது ‘பத்மபூஷன் மம்முட்டி’ ஆகியிருக்கிறார் என்றும், என்னுடைய ரசிகர்கள் மம்முட்டியின் ரசிகர்களாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பு என்றும் கூறியிருந்தார். இதற்கு நன்றி தெரிவித்த மம்முட்டி, நாம் விரைவில் சந்திப்போம் எனவும் தெரிவித்திருந்துள்ளார். 

Kamal Haasan Mammootty
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe