Advertisment

சிங்கம் புலியை நேரில் அழைத்து பாராட்டிய கமல்

137

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி வெளியான படம் ‘தாய் கிழவி’. இப்படத்தில் ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன், முனீஸ் காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியான், முத்துக்குமார், ரெய்ச்சல் ரெபேக்கா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். 

Advertisment

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை மதுரையில் முதல் நாள் முதல் காட்சியை சிவகார்த்திகேயன், ராதிகா உள்ளிட்ட படக்குழுவினர் பலர் ரசிகர்களுடன் கண்டு கழித்தனர். இப்படம் இதுவரை ரூ. 22 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இப்படம் மார்ச் 6ஆம் தேதி முதல் மலையாளத்தில் வெளியாகிறது. 

Advertisment

இந்த நிலையில் இப்படத்தில் கமலின் தீவிர ரசிகராக நடித்த சிங்கப் புலியை கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அப்போது சிங்கம் புலி நடிப்பை கமல் பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பில் கமலின் மகள் ஸ்ருதிஹாசன், இயக்குநர் சிவகுமார் முருகேசன் உடனிருந்தனர். முன்னதாக தாய் கிழவி பட நிகழ்ச்சியில் சிங்கம் புலி கமல் சாரை இதுவரை பார்த்ததில்லை எனத் தெரிவித்திருந்தார். அது தற்போது நிறைவேறியுள்ளது. 

Sivakumar Murugesan singam puli Kamal Haasan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe