திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக திகழும் ரஜினிகாந்த் அரை நூற்றாண்டு காலமாக ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். 50ஆவது ஆண்டு திரைப்பயணத்தை கொண்டாடும் அவர் இன்று தனது 75வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் கமல், மோகன்லால் உள்ளிட்ட பல்வேறு திரைப் பிரபலங்களும் எக்ஸ் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் ரஜினி - கமல் நட்பை போற்றும் வகையில் ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் இருவரும் ஆரம்பக்காலத்தில் சந்தித்தது முதல் தற்போது வரை பயணிக்கும் புகைப்படங்களை ஏஐ மூலம் உருவாக்கி ‘நண்பனே... நண்பனே...’ என சிறப்பு பாடலையும் பின்னணியில் இணைத்துள்ளனர். இந்த பாடலும் வீடியோவும் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
ஜெயிலர் 2-வில் நடித்து வரும் ரஜினி அடுத்ததாக கமல் நிறுவனத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார். இதையடுத்து இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒன்றாக இணைந்து நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us