Advertisment

கமல் தயாரிக்கும் அடுத்த பட அப்டேட்!

49

கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் கடைசியாக ‘அமரன்’ படத்தை தயாரித்திருந்தது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. பின்பு கமல் நடித்த தக் லைப் படத்தை மணிரத்தினத்தில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருந்தது இப்படம் பெரிய வசூலை ஈட்டவில்லை.

Advertisment

இதனைத் தொடர்ந்து ரஜினியின் 173வது படமாக உருவாகும் இப்படத்தை ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். இப்படத்தை தொடர்ந்து ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கும் படத்தை இந்நிறுவனம் தயாரிப்பதாக கூறப்படுகிறது. 

Advertisment

இந்த நிலையில் இந்நிறுவனத்தின் அடுத்த பட அறிவிப்பு நாளை மாலை 6:01 மணிக்கு வெளியாகிறது. இப்படம் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘தாய் கிழவி’ பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கும் படமாக இருக்கும் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது உறுதியாகும் பட்சத்தில் அமரன் பட வெற்றிக்குப் பிறகு மீண்டும் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

Raajkamal Films Kamal Haasan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe