தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனத்தின் அனைத்து பணிகளையும் நிர்வகித்து வந்தவர் ஏவிஎம் சரவணன். ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித் என பல்வேறு முன்னணி நடிகர்களை வைத்து ஹிட் படங்களை தயாரித்தவர். எப்போதும் கைகளைக் கட்டிக்கொண்டு பணிவுடனும் நட்போடும் பழகக்கூடியவர். இவர் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் திரை பிரபலங்கள் ரஜினிகாந்த், சூர்யா உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். ஆனால் கமல் வெளியூரில் இருந்ததால் வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்தார். அதில் அவர் என்னுடைய அப்பா ஸ்தானம் என்றும் அவரின் பெயர் சொல்லும் பிள்ளையாக இருப்பேன் என்றும் உருக்கமாக பல விஷயங்களை பேசியிருந்தார்.
இந்த நிலையில் இன்று சென்னை வந்த அவர், ஏவிஎம் சரவணன் மகன் மற்றும் மகளை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.
Follow Us