Advertisment

“நான் சொல்வதை விட மக்கள் சொல்வார்கள் - கமல்ஹாசன் பாராட்டு

13 (44)

அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன், முனீஸ் காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியான், முத்துக்குமார், ரெய்ச்சல் ரெபேக்கா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ளார். இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். 

Advertisment

படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகியிருந்தது. அதில் வயதான பாட்டி தோற்றத்தில் ராதிகா சரத்குமார் தோன்றியிருந்தார். ஒரு கிராமத்தில் அவர் வட்டி வசூலிக்கும் கரார் பாட்டியாக இருக்கும் நிலையில் அவரை சுற்றி என்ன நடக்கிறது என்பதை காமெடி எமோஷனல் கலந்த ஒரு படமாக இது இருக்கும் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. இப்படம் முதலில் வரும் 20ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென பின்பு வரும் 27ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. 

Advertisment

12 (38)

இந்த நிலையில் இப்படத்தை படக்குழுவினருடன் கமல்ஹாசன் பார்த்துள்ளார். படம் முடித்துவிட்டு இயக்குநரை கட்டிப்பிடித்து பாராட்டினார். பின்பு படம் குறித்து பேசிய அவர், “இப்படத்தை நானோ பத்திரிக்கையாளர்களோ சொல்வதைவிட மக்கள் சொல்வார்கள்” என்றார். உடனே சிவகார்த்திகேயனை பார்த்து நல்ல தயாரிப்பாளர் என்றும் இயக்குநரை பார்த்து சிறப்பான டைரக்டர் என்றும் மனம் நெகிழ்ந்து பாராட்டினார். 

actor sivakarthikeyan Kamal Haasan radhika
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe